நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா-பாதிப்பு எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டியது

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Update: 2021-10-26 16:52 GMT
நாமக்கல்:
44 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 976 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் பிற மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 2 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 51 ஆயிரத்து 978 ஆக அதிகரித்தது.
இந்தநிலையில் நேற்று மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 22 ஆக அதிகரித்து உள்ளது.
536 பேருக்கு சிகிச்சை
இதற்கிடையே நேற்று 65 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 990 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 496 பேர் பலியான நிலையில், 536 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்