விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தொண்டி,
திருவாடானை தாலுகா கட்டவிளாகம் ஊராட்சியை சேர்ந்த ருத்திரன் பட்டி, கள்ளவழியேந்தல், இலுப்பக்குடி, கீழ்குடி, கட்டவிளாகம் ஆகிய கிராமங்களில் கடந்த 2020-21-ம் ஆண்டு நல்ல விளைச்சல் ஏற்பட்ட நிலையில் கதிர் அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் கன மழை பெய்ததால் நெற்பயிர்கள் முளைத்து விட்டன. மேலும் குலைநோய் போன்ற நோய்கள் தாக்கப்பட்டது. இதனால் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் அதிகஅளவில் பாதிக்கப்பட்டனர். கடந்த 2020-21-ம் ஆண்டுக்கு தங்கள் ஊராட்சியில் பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய இழப்பீட்டு தொகையை பயிர் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க மறுத்துள்ளது. இது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயலாக உள்ளது. எனவே முதல்-அமைச்சர் மற்றும் தமிழக அரசு பயிர் இன்சூரன்ஸ் கம்பெனியிடம் உரிய பேச்சு வார்த்தை நடத்தி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக விவசாயி களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் சங்கத்தலைவர் கட்டவிளாகம் நமச்சி வாயம் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர்.