புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சி
போடிமெட்டு மலைப்பாதையில் மழைநீர் பாறையில் புதிதாக அருவி போல் கொட்டியது.
போடி:
போடி மற்றும் அதனை சுற்றியுள்ள போடி மெட்டு, குரங்கணி, கொட்டக்குடி, முதுவாக்குடி, கொழுக்குமலை ஆகிய மலைக்கிராமங்களில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து எல்லைப்பகுதியில் இருக்கும் போடி பகுதியில் அடிக்கடி பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடி மெட்டு மலைப்பாதையில் புலியூத்து என்னுமிடத்தில் பாறையில் மழைநீர் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சி போல் கொட்டுகிறது. இதனை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பார்த்து புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.