தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-26 16:28 GMT


குடிநீர் சீராக கிடைக்குமா?

கோத்தகிரி அருகே உள்ள ஜக்கலோடை கிராமத்திற்கு குடிநீர் வினியோகம் செய்ய பொருத்தப்பட்டுள்ள மின் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் கிராமத்திற்கு குடிநீர் வினி யோகம் தடைபடுகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினயோகம் செய்யப்படவில்லை. எனவே புதிய மின்மோட் டாரை பொருத்தி சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

மோகன், கோத்தகிரி.

பழுதான நிழற்குடை

  பந்தலூர் அருகே தாளுரில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை பழுதடைந்து ஆபத்தாக காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மழையில் நனைந்தபடி பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த நிழற்குடையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ராமன், பந்தலூர்.

மதுபாராக மாறிய பள்ளி

  கோவை கணபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் தினமும் மாலை நேரத்தில் சுற்றுச்சுவர் ஏறி உள்ளே குதித்து செல்லும் மர்ம நபர் கள், அந்த பள்ளியை மதுபாராக மாற்றி வருகிறார்கள். மேலும் உள்ளே செல்லும் அவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கிறார்கள். எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சம்பத், கோவை.

பழுதான குடிநீர் தொட்டி

  பூராண்டம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுலட்சுமி நாயக்கன்பாளையத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பழுதடைந்து எந்த நேரத்திலும் விழக்கூடிய நிலையில் இருக்கிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு அந்த குடிநீர் தொட்டியை அகற்ற வேண்டும். அல்லது அதை சரிசெய்ய வேண்டும்.
  லட்சுமி, பூராண்டம்பாளையம்.

சான்றிதழ் வழங்கப்படுமா?

  ஆனைமலை தாலுகாவில் சாதி, வருமானம் உள்பட பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பிக்கப்படுகிறது. ஆனால் அந்த சான்றிதழ்கள் உடனடியாக கிடைப்பது இல்லை. பல நாட்களாக அதிகாரிகள் இழுத்தடித்து வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனுக்குள் சான்றிதழ் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
  துர்காதேவி, குப்புச்சிப்புதூர்.

வீணாக செல்லும் குடிநீர்

  கோவை ஆர்.எஸ்.புரம் பி.எம்.சாமி காலனி 3-வது தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் 6 மாதங்களாக வீணாக செல்கிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  பூசைகண்ணு, ஆர்.எஸ்.புரம்.

தேங்கி நிற்கும் மழைநீர் 

  பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி 5-வது வார்டு குப்பிச்சிபாளையம் விநாயகர் கோவில் வீதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அகற்ற வேண்டும்.
  வினிதா, குப்பிச்சிபாளையம்.

சாக்கடை கால்வாயில் அடைப்பு

  தொண்டாமுத்தூர் பஜனை கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு கழிவுநீர் தேங்கி நிற்பதுடன் சில இடங்களில் வழிந்து தெருவில் ஓடுகிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாக்கடை கால்வாயில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.
  கந்தன், தொண்டாமுத்தூர்.

கோவை வழியாக பஸ்கள் வேண்டும்

  மேட்டுப்பாளையத்தில் இருந்து திண்டுக்கல், தேனிக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவை திருப்பூர் வழியாக சென்று வருகிறது. கோவை வழியாக செல்வது இல்லை. இதனால் காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் பகுதியை சேர்ந்தவர்கள் கோவை வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இங்கிருந்து திண்டுக்கல், தேனிக்கு கோவை வழியாக பஸ்கள் இயக்க வேண்டும்.
  நாகராஜன், மேட்டுப்பாளையம்.

தாறுமாறாக வீசப்படும் குப்பைகள்

  கோவை ராமநாதபுரம் ஆறுமுகம் நகர் குடியிருப்பு அருகே குப்பைகள் சாலையோரத்தில் தாறுமாறாக வீசப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுவதால் நோய் ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருகிறது. எனவே குப்பைகளை குப்பை தொட்டியில் போடவும், அந்த குப்பைகளை முறையாக சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  கார்த்தி, ராமநாதபுரம்.

தெருநாய்கள் தொல்லை

  கோவை பீளமேடு ஏ.டி.காலனி பயனியர் மில் ரோட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இரவு நேரத்தில் இந்த வழியாக செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
  பிரசாந்த் குமார், கோவை.

வேகத்தடை வேண்டும்

  தொண்டாமுத்தூரில் கெம்பனூர், அட்டுக்கல் சாலை சந்திக்கும் இடத்தில் வேகத்தடை இல்லை. இதனால் இந்த வழியாக வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு அங்கு வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
  ராஜ்குமார், கெம்பனூர்.
  
  

மேலும் செய்திகள்