கோவையில் 128 பேருக்கு கொரோனா

கோவையில் 128 பேருக்கு கொரோனா;

Update: 2021-10-26 15:00 GMT
கோவையில் 128 பேருக்கு கொரோனா
கோவை

கோவையில் நேற்று 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது. 

கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த 39 வயது ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,404ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 154 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 2 லட்சத்து 42 ஆயிரத்து 387 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,381பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்