தென்காசி:
தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாறுகால்கள் நிறைந்து அந்த தண்ணீரும் சாலையில் சென்றது. மழை பெய்து வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.