தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை பேட்டையில் தொழில் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பேட்டை:
பேட்டை கோடீஸ்வரன்நகர் 16-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 55). இவர் பழைய காரை வாங்கி விற்பனை செய்து வந்தார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் இவரது தொழில் சரிவர நடைபெறவில்லை. இதனால் மனம் உடைந்த குமார் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.