போலி கால்நடை மருத்துவர் கைது

போலி கால்நடை மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-25 19:34 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் நானாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைராஜ். இவர் கால்நடை மருத்துவர் என்று கூறி கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் அளித்த சிகிச்சையால் கால்நடை ஒன்று இறந்தது. இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் கால்நடை மண்டல இணை இயக்குனரிடம் புகார் அளித்தனர். இதுபற்றி தூத்தூர் போலீசார் துரைராஜிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் 8-ம் வகுப்பு வரைதான் படித்துள்ளார் என்பதும், கடந்த 5 ஆண்டுகளாக கால்நடை மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைராைஜ கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்