கொரோனாவுக்கு ஒருவர் பலி

கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2021-10-25 19:34 GMT
அரியலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதுடைய ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 36 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 55 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 469 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 543 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்