டாஸ்மாக் கடைகள் மூடல்

நாளை, 30-ந் தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-10-25 19:13 GMT
விருதுநகர், 
சிவகங்கை நகரில் நாளை (புதன்கிழமை) மருது சகோதரர்களின் நினைவு தினம் நடைபெற உள்ள நிலையில் நாளை திருச்சுழி, கரியாப்பட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிவகங்கை செல்லும் பாதையில் உள்ள டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள், தனியார் மதுபான விற்பனை ஸ்தலங்கள் மூடப்படும். மேலும் வருகிற 30-ந் தேதி பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு வருகிற 29-ந் தேதி மாலை 6 மணி முதல் 30-ந் தேதி முழுவதும் டாஸ்மாக் மது கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் தனியார் மது விற்பனைஸ்தலங்கள் மூடப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.  இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் கடைகளையும், தனியார் மது விற்பனை ஸ்தலங்களையும் திறந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

மேலும் செய்திகள்