குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 538 மனுக்கள் பெறப்பட்டன
திருவண்ணாமலையில் நடந்த குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 538 மனுக்கள் பெறப்பட்டன.;
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
மனு அளிக்க வந்த பொதுமக்களை, போலீசார் சோதனை செய்த பின்னரே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.
பொது மக்களிடம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிலும், மாற்றுத்திறனாளிகளிடம் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார்.
இதில், வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளிக்கப்பட்டது.
மனுக்களை பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் வழங்கி அதன் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 538 மனுக்கள் பெறப்பட்டன.
மேலும் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 240 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.