லாரி டிரைவர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
பெரியகுளம் அருகே லாரி டிைரவர் வீட்டில் 10 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் திருடி சென்றனர்.;
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி முத்து. லாரி டிரைவர். இவர், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். இவரது மனைவி சக்கம்மாளும் கூலி வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மதியம் அவருடைய வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து 10 பவுன் நகைகளை திருடி சென்றனர்.
இது குறித்து மீனாட்சி முத்து தென்கரை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.