குமாரபாளையத்தில் லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி; 4 பேர் கைது
குமாரபாளையத்தில் லாரியில் ரேஷன் அரிசி கடத்த முயற்சி; 4 பேர் கைது;
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள ஏரிதெரு ரேஷன் கடையில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது அந்த பகுதி வழியாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த லாரியில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த குமாரபாளையத்ைத சேர்ந்த பூரணசாமி (வயது 25), கோகுல் (28), மணிகண்டன் (26), தங்கவேல் (29) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் ரேஷன் அரிசியுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கு நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.