சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
வால்பாறை
வால்பாறை நகரில் சாலைகளில் உலா வரும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.
கால்நடைகள் நடமாட்டம்
வால்பாறை நகர் எஸ்டேட் தேயிலை தோட்டங்களை சூழ்ந்த ஒரு பகுதியாகும். வால்பாறை நகர் பகுதிக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் புகுந்து சிறுத்தைகள் கால்நடைகளை வேட்டையாடுகிறது.
இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சமடைகின்றனர். கால்நடைகளை இரவில் தெருக்களில் சுற்றித்திறியவிடாமல் பட்டிகளில் அடைத்து வைத்து வளர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.மேலும் கால்நடைகளின் நடமாட்டம் சாலையில் அதிகளவில் இருப்பதால் 2 சக்கர வாகனங்களில் வருபவர்கள் கால்நடைகளின் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அடிக்கடி விபத்துகள்
இதுகுறித்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கூறுகையில், வால்பாறை பகுதியை பொறுத்தவரை கால்நடைகளின் நடமாட்டத்தால் பொது மக்கள் வாகன ஓட்டிகள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகள் என்று பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வால்பாறை பகுதியில் கோசாலை வசதியில்லாததால் கால்நடைகளை பிடித்து அடைத்து வைக்க முடிவதில்லை. மேலும் சாலைகளில் கால்நடைகள் அதிகஅளவில் உலா வருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைவதோடு, அச்சமடைந்து வருகின்றனர். என்றனர்.