92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
திருப்பூர் மாவட்டத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 77 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 77 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 980-ஆக உள்ளது.
92 பேர் குணமடைந்தனர்
இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 92 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 238-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 768 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று கொரோனாவுக்கு யாரும் பலியாகவில்லை. இதனால் பலி எண்ணிக்கை 974-ஆக உள்ளது.