தூத்துக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடியில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்

Update: 2021-10-25 14:30 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 33). இவர் நேற்று மாலையில் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று விட்டு வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் திடீரென மாரியம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டாராம்.
இது குறித்து அவர் தென்பாகம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து லெவிஞ்சிபுரம் மற்றும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த வழிப்பறி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்