தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2021-10-25 14:21 GMT
பந்தலூர்

பந்தலூர் அருகே நெல்லியாளம், சேரம்பாடி, சேரங்கோடு, கொளப்பள்ளி, பாண்டியாறு உள்ளிட்ட அரசு தேயிலை தோட்டங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

மேலும் தங்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தேவாலா அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

மேலும் செய்திகள்