மழைநீர் கால்வாயில் படிந்த மண் அகற்றம்
மழைநீர் கால்வாயில் படிந்த மண் அகற்றம்;
ஊட்டி
ஊட்டி எட்டின்ஸ் சாலையில் பழைய ஆவின் நிலையம் எதிரே மழைநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் செல்லும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாயில் சேகரமாகிறது. கால்வாயில் மண் படிந்தும், குப்பைகள் அடைத்தும் இருந்தது. இதனால் கனமழையின்போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை சூழ்ந்து தேங்கும் நிலை இருந்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் நகராட்சி மூலம் கால்வாயில் படிந்து இருந்த மண் அகற்றப்பட்டது. மண், குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர். நடைபாதையும் தூய்மைப்படுத்தப்பட்டது.