ஆத்தூரில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்கு போட்டு தற்கொலை

ஆத்தூரில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-10-25 12:01 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூரில் மகன் இறந்த துக்கத்தில் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகன் சாவு
ஆத்தூர் தளவாய் சுவாமி கோவில் தெருவில் வசித்து வருபவர் பூலோக பாண்டியன் மகன் ராஜகோபால் (வயது 61). இவரது மனைவி தேவசேனா (51). இவர்களுக்கு மோனிஷ், மனோஜ் பாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உண்டு. இரண்டாவது மகன் மனோஜ் பாண்டியன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடடார். அன்று முதல் மகன் இறந்த துக்கம் தாங்காமல் தேவசேனா மனமுடைந்த நிலையில் சரியாக சாப்பிடாமல் இருந்துள்ளார். இதில் அவரது உடல் நலம் பாதித்து அடிக்கடி வயிற்று வலியால் வேதனை பட்டுள்ளார்.
தற்கொலை
 இந் நிலையில் சிகிச்சை எடுத்தும் மருந்துகள் சரியாக சாப்பிடாமல் இருந்ததால் அவருக்கு அதிகமான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராஜகோபாலும் அவரது மூத்த மகன் மோனிஷூம் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 
தேவசேனா வீட்டின் உத்தரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது சம்பவம் அறிந்து ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது பிணத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்