100 கிலோ குட்கா பறிமுதல்

பூதப்பாண்டி அருகே 100 கிலோ குட்காவை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-24 21:37 GMT
அழகியபாண்டியபுரம்:
பூதப்பாண்டி அருகே 100 கிலோ குட்காவை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
100 கிலோ குட்கா
தமிழகம் முழுவதும் குட்காவுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.  சிலர் அதை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பூதப்பாண்டி ேபாலீசாருக்கு அழகியபாண்டியபுரம் அருகே உள்ள தோமையார்புரம் பகுதியில் உள்ள குடோனில் குட்கா பதுக்கி வைத்து இருப்பதாக தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் போலீசார் தோமையார்புரத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது கிடைத்த தகவலின் பேரில் அங்குள்ள குமார் (வயது 33) என்பவரது வீட்டின் குடோனில் போலீசார் சோதனை போட்டனர். அங்கு 100 கிலோ குட்கா பதுக்கி வைத்து இருந்தது தெரிய வந்தது.
வாலிபர் கைது
 அதைத்தொடர்ந்து 100 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அங்கு இருந்த ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்தையும் கைப்பற்றினர். இதுதொடர்பாக குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட பணம் குட்கா விற்பனையில் கிடைத்ததா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்