மரம் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிப்பு

கடையநல்லூரில் மரம் சாய்ந்ததால் மின்வினியோகம் பாதிக்கப்பட்டது.;

Update: 2021-10-24 20:33 GMT
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் சாலையோரம் நின்ற பழமைவாய்ந்த பூவரசு மரம் நேற்று திடீரென்று சரிந்து சாலையில் விழுந்தது. அப்போது அங்குள்ள உயரழுத்த மின்கம்பிகளின் மீது மரத்தின் கிளைகள் விழுந்ததால், அவைகள் அறுந்தன. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சாலையில் சரிந்த மரத்தின் கிளைகளானது அருகில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் மீதும் விழுந்து கிடந்தது. இதனால் அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த சில வாகனங்கள் லேசான சேதம் அடைந்தன. உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, சரிந்த மரத்தை அகற்றி, மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்