புகையிலை பொருட்கள் விற்ற வாலிபர் கைது
நெல்லையில் புகையிலை பொருட்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
நெல்லை:
பாளையங்கோட்டை போலீசார் நேற்று முருகன்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பீமாராவ் மகன் சந்தீப் குமார் (வயது 27) என்பதும், புகையிலை விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.