மின்வாரிய ஊழியர்களுக்கு மனநல மேலாண்மை பயிற்சி
விக்கிரமசிங்கபுரத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு மனநல மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.;
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மின் பகிர்மான துணை மின் நிலையத்தில் பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் மன நல மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. தனியார் மண்டபத்தில் நடைபெற்ற 12 நாள் பயிற்சியில் பொதிகை அறக்கட்டளை பேராசிரியர்கள் ராஜன், வேல்முருகன், சுப்புராஜ் மற்றும் பேராசிரியர்கள் உடற்பயிற்சி, யோகாசன பயிற்சி, மனநல மேலாண்மை பயிற்சிகள் வழங்கினார்கள்.
பயிற்சியில் மின்வாரிய ஊழியர்கள் 18 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பயிற்சி நிறைவு விழாவுக்கு, விக்கிரமசிங்கபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் ராமகிளி தலைமை தாங்கி, மின்வாரிய ஊழியர்கள் சார்பில் மிகவும் நலிவுற்ற 8 பேருக்கு மின் விபத்தை தடுக்கும் ஆர்.சி.சி.பி கருவிகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை விக்கிரமசிங்கபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் ஆக்னஸ் சாந்தி செய்திருந்தார்.