13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்ெடடுப்பு

ராஜபாளையம் அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்ெடடுக்கப்பட்டுள்ளது.;

Update:2021-10-25 00:00 IST
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு கண்ெடடுக்கப்பட்டுள்ளது. 
கல்வெட்டு 
ராஜபாளையம் அருகே சோழபுரம் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியின் போது மண்ணுக்கு அடியில் புதைந்திருந்த கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு இதுகுறித்து ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தார். 
அதன்பேரில் தொல்லியல் ஆய்வாளர், மாணவர்களுடன் சேர்ந்து கல்வெட்டினை ஆய்வு செய்தார். ஆய்விற்கு பிறகு 
கந்தசாமி கூறியதாவது:- 
 தூய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு நான்கு வரிகளில் எழுதப்பட்டுள்ளது. முதல் வரி சிதைந்து காணப்படுவதால் படிக்க இயலவில்லை. 
13-ம் நூற்றாண்டு 
சோழபுரத்தில் 13-ம் நூற்றாண்டை சேர்ந்த உத்தம சோழ விண்ணகராழ்வாரான ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் கோவிலும் மற்றும் விக்கிரம பாண்டீஸ்வரமுடையாரான சிவன் கோவிலும் அமைந்துள்ளது. 
பெருமாள் கோவில் புனரமைப்பின் போது இ்ந்த கல்வெட்டு இடம் மாறி நாளடைவில் மண்ணில் புதைந்திருக்ககூடும். இப்பகுதியில் ஏராளமான கோவில் கற்கள் சிதறிய நிலையிலும் காணப்படுகிறது. சோழபுரத்தை உத்தம சோழ சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 
தான தர்மம் 
தேவியாற்றின் மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் ஆட்சியில் (கி.பி.1250 முதல் கி.பி.1278 வரை)  கட்டப்பட்டதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. சிவன் கோவிலுக்கு தென் மேற்கே அமைந்துள்ள வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில் உத்தம சோழ விண்ணகர் ஆழ்வார் கோவில் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. 
எனவே சோழபுரத்தில் சிவன் மற்றும் பெருமாள் கோவிலுக்கும் தான, தர்மங்களை பற்றி எண்ணற்ற செய்திகள் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்