வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சிவில் என்ஜினீயரிடம் ரூ.11 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி சிவில் என்ஜினீயரிடம் ஆன்லைனில் ரூ.11 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-10-24 18:27 GMT
கரூர், 
சிவில் என்ஜினீயர்
கரூர் அருகே உள்ள பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சேர்ந்தவர் குணா (வயது 24). சிவில் என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலைக்கு செல்ல விரும்பியுள்ளார். இதையடுத்து அவர் ஆன்லைன் மூலம் வெளிநாட்டு வேலை தேடி உள்ளார்.
அப்போது அதில் பதிவிட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் பேசிய மர்ம ஆசாமிகள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு உத்தரவாதம் தருவதாகவும் கூறி உள்ளனர். 
ரூ.11 லட்சம் மோசடி
இதனைதொடர்ந்து வெளிநாட்டிற்கு செல்ல விமான கட்டணம் மற்றும் விசா உள்ளிட்ட செலவுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை மொத்தம் ரூ.11 லட்சத்தை அவர்களது வங்கி கணக்கில் குணா செலுத்தியுள்ளார். ஆனால் அந்த மர்ம ஆசாமிகள் வேலை வாங்கித்தரவில்லை. 
இதில், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த குணா கரூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். மேலும், வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.11 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த புகார் மனு குறித்து இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்