நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.6½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.6½ லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல்:
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 19½ டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.6½ லட்சத்துக்கு விற்பனையானது.
உழவர் சந்தை
நாமக்கல்- கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்த சந்தையில் தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் 50 சதவீத விவசாயிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது ஒருநாள் விட்டு ஒருநாள் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையும் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த வகையில் நேற்று 17½ டன் காய்கறிகள் மற்றும் 2 டன் பழங்கள் விற்பனைக்கு வந்திருந்தன. இவை ரூ.6 லட்சத்து 58 ஆயிரத்து 340-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 3,670 பேர் வாங்கி சென்றனர்.
விலை விவரம்
நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.36-க்கும், கத்தரி கிலோ ரூ.52-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.32-க்கும், புடலங்காய் கிலோ ரூ.28-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.40- க்கும், பீட்ரூட் கிலோ ரூ.52-க்கும், கேரட் கிலோ ரூ.68-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.64-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.36-க்கும், இஞ்சி கிலோ ரூ.75-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
சின்ன வெங்காயம் கிலோ ரூ.25-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.48-க்கும் விற்பனை செய்யப்பட்டன. காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ள நிலையில், அவற்றின் விலை சற்று குறைந்து இருப்பதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.