சேந்தமங்கலம்:
நாமக்கல் அருகே உள்ள காவேட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பரணி செல்வன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த மாணவி உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் சேந்தமங்கலம் போலீசில் தனது மகளை கண்டுபிடித்து தருமாறும், பரணி செல்வன் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பரணி செல்வன் அந்த மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.
அதையடுத்து நேற்று நாமக்கல் பஸ் நிலைய பகுதியில் நின்று கொண்டிருந்த அந்த மாணவியை போலீசார் மீட்டனர். மேலும் காவேட்டிப்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த கூலித்தொழிலாளி பரணி செல்வனை போலீசார் ேபாக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.