புதிய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம்

உத்தமபாளையத்தில் புதிய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இன்று முதல் செயல்பட இருக்கிறது.

Update: 2021-10-24 17:15 GMT
உத்தமபாளையம்: 

உத்தமபாளையத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அங்குள்ள அம்மாபட்டி சாலையில் ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து நேற்று புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை ஆர்.டி.ஓ. கவுசல்யா நேற்று ஆய்வு செய்தார். அவருடன் உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன், துணை தாசில்தார்கள் சுருளி முருகன், ஜாகீர் மற்றும் வருவாய் துறையினர் இருந்தனர். 

ஆய்வின்போது ஆர்.டி.ஓ. கூறுகையில், இந்த புதிய கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இயங்க மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார். அதன்படி தாலுகா அலுவலகத்தில் இயங்கி வந்த தேர்தல் பிரிவு அலுவலகம், வட்ட வழங்கல், நில அளவை பிரிவு, ஆதார், இ-சேவை மையம் ஆகியவை இடமாற்றம் செய்யப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) முதல் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தில் அலுவலகம் செயல்படும் என்றார்.

மேலும் செய்திகள்