தேவரிஷிகுப்பத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
தேவரிஷிகுப்பத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது
கே.வி.குப்பம்
கே.வி.குப்பத்தை அடுத்த தேவரிஷிகுப்பத்தில் நேற்று மாலை கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கால்வாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாக தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழை நீரை வெளியேற்ற முடியாமல் பல மணிநேரம் பொதுமக்கள் தவித்தனர். பினனர் தற்காலிகமாக கால்வாய்வெட்டி அருகில் இருக்கும் தரைகிணற்றில் மழைவெள்ளம் சென்றுவிழும்படி செய்தனர்.
ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதெல்லாம் இதுபோல மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் நிரந்தர தீர்வுகாண வேண்டும். என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.