நாகையில் துப்பாக்கி கண்காட்சி
பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்க நாளையொட்டி நாகையில் துப்பாக்கி காண்காட்சியை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தொடங்கி வைத்தார்.
வெளிப்பாளையம்:
பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு வீரவணக்க நாளையொட்டி நாகையில் துப்பாக்கி காண்காட்சியை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தொடங்கி வைத்தார்.
வீரவணக்க நாள்
கடந்த 1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலின் போது, போலீஸ் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்பட 10 பேர் வீரமரணமடைந்தனர்.அவர்களின் தியாகத்தை நினைவுக்கூரும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 21-ந் தேதி போலீசார் வீரவணக்க நாள்(நீத்தார் நினைவு நாள்) அனுசரிக்கப்பட்டு வருகிறது. போலீசார் வீர வணக்க நாளையொட்டி நாகை மாவட்ட போலீஸ் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி கண்காட்சி
அதன் ஒரு பகுதியாக நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரித்திடலில் நேற்று துப்பாக்கி கண்காட்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் தலைமை தாங்கி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதில் ஏ.கே.47 பிஸ்டல், 307 உள்ளிட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் கலவரத் தடுப்பு வாகனமான வஜ்ரா வாகனமும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது.
இந்த கண்காட்சியை பொதுமக்கள், குழந்தைகள் உள்பட பலர் கண்டு ரசித்தனர். நாகை மாவட்டத்தில் போலீஸ் துறை சார்பில் துப்பாக்கி கண்காட்சி நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.