ராஜாதோப்பு அணையில் தவறி விழுந்து ஒருவர் சாவு

ராஜாதோப்பு அணையில் தவறி விழுந்து ஒருவர் சாவு

Update: 2021-10-24 16:29 GMT
காட்பாடி

கே.வி. குப்பம் தாலுகாவில் ராஜாதோப்பு அணை உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நண்பர்கள் 3 பேர் அங்கு சென்று மது குடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த அணையில் ஒருவர் தவறி விழுந்து விட்டார்.

இதனால் பதறிப்போன மற்ற 2 பேரும் உடனே காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் விரைந்து வந்து அணையில் இறங்கி தேடினர். மாலை 6.30 மணியை கடந்ததும் இருட்டாகி விட்டதால், அவரின் உடலை தேடும் பணியை தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள் நிறுத்தி விட்டனர்.

அதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை மீண்டும் சென்று ராஜாதோப்பு அணையில் தேடும் பணியில் ஈடுபடுவார்கள். இதுகுறித்து பனமடங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்