திண்டுக்கல்லில் ரூ/105-ஐ தாண்டிய பெட்ரோல் விலை

திண்டுக்கல்லில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105ஐ தாண்டியது.

Update: 2021-10-24 15:43 GMT
திண்டுக்கல்:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தை பொறுத்து பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாகவே பெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. 
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103-க்கு மேல் விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.39-க்கு விற்பனை ஆனது. 
அதேபோல் பெட்ரோல் விலைக்கு இணையாக டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.101.47-க்கு விற்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்