ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் பலத்த மழை

ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் நேற்று ஒரு மணிநேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.;

Update: 2021-10-24 14:12 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் நேற்று ஒரு மணிநேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

பலத்த மழை

ஜோலார்பேட்டை, சந்தைக்கோடியூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அதனை தொடர்ந்து இரவு வரை சாரல் மழை பெய்தது.  தொடர்ந்து மழை பெய்தால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள ஏரிகளுக்கு மழைநீர் செல்லும் வழிகளில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் மழைநீர் செல்லமால்  ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்ப இல்லை. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி மற்றும் ஏலகிரி மலையில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏலகிரி மலையில் இருந்து கிழே இறங்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்க இடமின்றி மழையில் நனைந்தபடி வந்தனர். மழைகாரணமாக வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வாணியம்பாடி

வாணியம்பாடி, ஆலங்காயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக மாலை நேரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணியளவில் வாணியம்பாடி, ஆலங்காயம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது.

திருப்பத்தூரிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் சின்னவேப்பம்பட்டு பகுதியில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்