திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை பலாத்காரம் செய்த பெயிண்டர் கைது
குன்றத்தூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுமியை பலாத்காரம் செய்த பெயிண்டரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி,
குன்றத்தூரை சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் குன்றத்தூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரணை செய்ததில் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கத்தை சேர்ந்த விஜயகுமார் (வயது 28) என்பவர் சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் சிறுமியை மீட்டு விஜயகுமாரை கைது செய்து விசாரித்தபோது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து விஜயகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.