திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கோட்ட மேலாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2021-10-24 11:24 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் தென்னக ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ரெயில் நிலையம் அருகில் உள்ள தண்டவாள பகுதிகளில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். 

அதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் அறை மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதை பணிகளையும் பார்வையிட்டார். 

இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அப்போது, அவருடன் ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்