மீன்பிடிக்க விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு

களக்காட்டில் மீன்பிடிக்க விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு மீட்கப்பட்டது.

Update: 2021-10-23 21:46 GMT
களக்காடு:
களக்காடு புதிய பஸ் நிலையம் அருகில் மீன்பிடிப்பதற்காக சிலர் வலைவிரித்து இருந்தனர். அதில் நேற்று காலையில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது. இதுகுறித்து களக்காடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின்பேரில், வனச்சரகர் பாலாஜி மேற்பார்வையில், வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று, வலையில் சிக்கிய மலைப்பாம்பை பத்திரமாக மீட்டனர். பின்னர் அதனை களக்காடு முதலிருப்பான் வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்