ஆற்றில் மிதந்து வந்த முதியவர் பிணம்

ஆற்றில் முதியவர் பிணம் மிதந்து வந்தது.

Update: 2021-10-23 21:36 GMT
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள அணைக்கரை கீழணையில் இருந்து பிரிந்து செல்லும் வடவாற்றில் ஆண் பிணம் ஒன்று குயவன்குப்பம் கிராமத்தின் அருகே மிதந்து செல்வதாக தழுதாழை மேடு கிராம நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் கொடுத்த தகவலின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர். இதில், பிணமாக மிதந்தவருக்கு சுமார் 70 வயது இருக்கலாம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதியவரின் உடலை கரைக்கு கொண்டு வர கிராம மக்கள் முன்வராததால், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆற்றில் இறங்கி முதியவரின் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தார். இறந்தவர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அந்த முதியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, எப்படி இறந்தார்? என்பன உள்ளிட்டவை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்