வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது
நெல்லையில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
தென்காசி அருகே உள்ள நயினாகரத்தை சேர்ந்தவர் ஜோதிராஜ் (வயது 38). கடந்த 21-ந்தேதி இரவு இவர் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது 3 பேர் வந்து அவரிடம் அரிவாளை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துச்சென்று விட்டனர்.
இதுகுறித்து பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தருவையை சேர்ந்த சுடலைமணி (27), சி.என்.கிராமத்தை சேர்ந்த சுடலைக்கண்ணு (27), கங்கைகொண்டானை சேர்ந்த இசக்கிமுத்து (27) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.