அட்டைப்பெட்டிகளின் விலை 20 சதவீதம் உயர்வு

மூலப்பொருட்களின் உயர்வால் அட்டைப்பெட்டிகளின் விலை 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

Update: 2021-10-23 18:51 GMT
கரூர், 
சங்க கூட்டம்
கரூர் மாவட்ட அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் கரூரில் நேற்று நடைபெற்றது.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்க துணைத்தலைவர் திருமூர்த்தி கூறியதாவது:-
நிலக்கரி பற்றாக்குறை மற்றும் இறக்குமதியாகும் வேஸ்ட் பேப்பர் தட்டுப்பாடு காரணமாக காகித ஆலைகள் அட்டைபெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான காகிதங்கள் விலையை கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.மற்ற உப மூலப்பொருளான பசை மாவு, ஸ்டிச்சிங், பின் போன்ற பொருட்களின் விலையும் கடந்த 3 மாதங்களாக ஏறுமுகத்தில் உள்ளது. மேலும் தொழிலாளர் பற்றாக்குறையும், ஊதியமும், போக்குவரத்து செலவுகளும் உயர்ந்துள்ளன.
20 சதவீதம் உயர்வு
இந்தநிலையில், ஜி.எஸ்.டி. 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் மூலதனம் அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு ஜி.எஸ்.டி.யை குறைக்க வேண்டும். அட்டைப்பெட்டிகளின் விலை தற்போதைய விலையில் இருந்து 20 சதவீதம் வரை உயர்த்துவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்