21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்குள கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 21 ஆயிரம் பேருக்குள கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 313 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூம் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
மேலும் முகாம்களில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் குலுக்கல் முறையில் 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசாக கலர் டி.வி.யும், இரண்டாம் பரிசாக மிக்சியும், 3-வது பரிசாக கிரைண்டரும் வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று காலை முதலே பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வமுடன் வந்தனர்.
கலெக்டர் ஆய்வு
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் அச்சமங்கலம் ஊராட்சி மாக்கனூர் கிராமம், கந்திலி ஊராட்சி ஒன்றியம், ஆதியூர் ஊராட்சி ராவுத்தம்பட்டி கிராமம், சு.பள்ளிப்பட்டு ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது டாக்டர்களிடம் எத்தனை நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, எவ்வளவு தடுப்பூசி இருப்பு உள்ளது என்று கேட்டறிந்தார். தடுப்பூசி செலுத்திக்கொள்வதின் அவசியத்தையும், அதன் நன்மைகளையும் பொதுமக்கள் அறியும்படி எடுத்துகூற வேண்டும்.
ஊராட்சி மன்ற தலைவர்களிடம் உங்கள் ஊராட்சிகளிலுள்ள அனைத்து வார்டுகளிலும் எத்தனை நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார்கள் என்ற விவரங்களை தயார் செய்ய வேண்டும்.
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு தடுப்புசி செலுத்த வேண்டும்.
கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம் 100 சதவீதம் பொது மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் கலெக்டர் அமர்குஷ்வாஹா அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது சார் ஆட்சியர் (பொறுப்பு) பானு, தாசில்தார் சிவபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிமேகலை ஆனந்தகுமார், சிவகுமார், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
21 ஆயிரம் பேருக்கு
மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களில் 21 ஆயிரத்து 158 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.