திருப்பூர் மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-10-23 17:54 GMT
திருப்பூர், அக்.24-
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. அதன்படி நேற்று சற்று அதிகரித்து திருப்பூர் மாவட்டத்தில் 81 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களையும் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 94 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 87 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 57 ஆக அதிகரித்துள்ளது.மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 792 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை. கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 974 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்