மோட்டார்சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது
மோட்டார்சைக்கிள் திருடிய 3 வாலிபர்கள் கைது;
மோகனூர்:
மோகனூரில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி எதிரில் வசித்து வருபவர் சக்கரவர்த்தி (வயது 43). என்ஜினீயரான இவர் கடந்த 19-ந் தேதி இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தினார். பின்னர் மறுநாள் காலையில் பார்த்தபோது, தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் மோகனூர் பகுதியில் போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பி.வெள்ளாளபட்டியை சேர்ந்த முருகன் மகன் நவீன்குமார் (21), திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ரெங்கசாமி மகன் பிரவின் ராஜ் (22), ஏர்போர்ட் முஸ்லிம் தெருவை சேர்ந்த சலீம் பாட்ஷா மகன் முகமது ரியாஸ் (22) என்பதும், இவர்கள் 3 பேரும் சக்கரவர்த்தியின் மோட்டார்சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து 3 வாலிபர்களையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
==========