தேனியில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்

தேனியில் தலைக்குப்புற கவிழ்ந்த கார், ஸ்கூட்டர் மீது மோதியதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update: 2021-10-23 17:30 GMT
தேனி:
தேனி மாவட்டம் பெரியகுளம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் திருஞானம் (வயது 50). நேற்று இவர், ஸ்ரீரெங்கபுரம் சென்று விட்டு ஸ்கூட்டரில் பெரியகுளம் நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தார். அவருடன், உறவினர் நாகஜோதி (40) என்பவரும் வந்தார். தேனி புறவழிச்சாலையில் அவர்கள் வந்தபோது, எதிரே அரண்மனைப்புதூரை சேர்ந்த தரணிதரன் (25) ஒரு காரில் வந்தார். அப்போது அவர் திடீரென பிரேக் போட்டதால், கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. மேலும் எதிரே வந்த ஸ்கூட்டர் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் ஸ்கூட்டரில் வந்த திருஞானம், நாகஜோதி 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த தரணிதரன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். 
இதுகுறித்து தகவல் அறிந்த தேனி போலீசார் விரைந்து சென்று, காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருஞானத்தின் மனைவி தமிழரசி கொடுத்த புகாரின் பேரில், காரை ஓட்டி வந்த தரணிதரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்