ஓய்வுபெற்ற மின் ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து பலி
ஆம்பூர் அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.;
ஆம்பூர்
ஆம்பூர் அருகே ஓய்வுபெற்ற மின் ஊழியர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தென்னம்பட்டு மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 76), ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் குப்புசாமியின் நிலத்தில் அருகில் உள்ள மார்க்கண்டேயன் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சிலர் அந்த வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது கிணற்றில் குப்புசாமி பிணமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் குப்புசாமி உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
குப்புசாமி கிணற்றில் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.