செந்துறை அருகே கள்ளத்துப்பாக்கி தயாரித்த விவசாயி கைது

செந்துறை அருகே கள்ளத்துப்பாக்கி தயாரித்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-23 15:52 GMT
செந்துறை :
நத்தம் தாலுகா செந்துறை அருகே உள்ள களத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆண்டிச்சாமி (வயது 51). விவசாயி. இவர், தனது வீட்டில் உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி வைத்து இருப்பதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், அவரது வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவரது வீட்டில் ஒரு நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அவர் கள்ளத்துப்பாக்கி தயாரிக்க தேவையான இரும்பு குழாய், கரிமருந்து, மரக்கட்டைகள் உள்ளிட்ட மூலப்பொருட்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆண்டிச்சாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்