பருத்தி தோட்டத்துக்குள் சிக்கிய 6 அடி நீள மலைப்பாம்பு
பருத்தி தோட்டத்துக்குள் 6 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது.;
செந்துறை:
நத்தம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 40). இவரது பருத்தி தோட்டத்தில் சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கிடந்தது. இதுகுறித்து நத்தம் தீயணைப்பு படையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் லட்சுமணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், அங்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனத்துறையினர் மூலம் கரந்தமலை பகுதியில் விடப்பட்டது.