ஓடும் பஸ்சில் முதியவரிடம் தங்க சங்கிலி திருட்டு

ஓடும் பஸ்சில் முதியவரிடம் தங்க சங்கிலி திருட்டு;

Update: 2021-10-23 15:03 GMT
துவரங்குறிச்சி, அக்.24-
சிவகங்கை மாவட்டம் முசுண்டபட்டி அருகே உள்ள சின்னாரம்பட்டி கிராமத்தை  சேர்ந்தவர் நாச்சி (வயது 70). இவர் நேற்று காலை திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே தெத்தூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக தெத்தூரில் இருந்து துவரங்குறிச்சிக்கு அரசு பஸ்சில் வந்தார். இந்தநிலையில் துவரங்குறிச்சி பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்த போது, அவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை. பஸ்சில் வரும்போது, யாரோ திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்