சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

கருங்குளம் பகுதியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-23 14:43 GMT
ஸ்ரீவைகுண்டம்:
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் குழந்தை திருமணம் நடைபெற்றதாக வந்த தகவலின் அடிப்படையில் கருங்குளம் யூனியன் பெண்கள் நல அலுவலர் நிர்மலாதேவி விசாரணை நடத்தினார். விசாரணையில், கருங்குளம் செல்வவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் சின்னத்தம்பி (வயது 21) என்பவர் 15 வயது சிறுமியை 2 நாட்களுக்கு முன்பு குழந்தை திருமணம் செய்ததும், இந்த திருமணத்துக்கு சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நிர்மலாதேவி அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா, குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சின்னதம்பியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்