புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
எட்டயபுரத்தில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் மேற்பார்வையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் படி விளாத்திகுளம்- எட்டயபுரம் ரோட்டில் உள்ள செல்வம் (வயது 49) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையை சோதனை செய்தனர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக செல்வம் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சூரிய நாராயண ராஜா (42), கணேசன் (47) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ரூ.18 ஆயிரம் மதிக்கத்தக்க புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.