ஓவியங்களால் அழகுபெறும் பழனி தாலுகா அலுவலகம்

பழனி தாலுகா அலுவலகம் ஓவியங்களால் அழகுடன் காணப்படுகிறது.

Update: 2021-10-23 13:40 GMT
பழனி:
பழனி தாலுகா அலுவலக வளாகம் புதுதாராபுரம் சாலையில் உள்ளது. இந்த வளாகத்தில் தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வனத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பழனி தாலுகா அலுவலகத்துக்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பித்தல் என பல்வேறு பணிகளுக்கு மக்கள் வருகின்றனர். இந்நிலையில் தற்போது தாலுகா அலுவலக வளாக உட்சுவர்களில் ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஓவியத்தில் பழனி முருகன் கோவில், ரெயில்நிலையம், வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணைகள் மற்றும் பழனி பகுதியில் சாகுபடியாகும் பயிர்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது அங்கு வருவோரை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்